Friday, 8 June 2012

நட்பு 


அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல என் உயிர் நட்பாக

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது கை கொடுக்கும் நண்பனின் ஒரு விரலே சிறந்தது
என் தோழி இந்திரா 


என் ஆருயிர் தோழியே .....



எனது இன்பத்திலும் துன்பத்திலும் 
துணையாய் இருந்து ....
எனது சுகங்களையும், துக்கங்களையும் 
பகிர்ந்து கொண்ட என் தோழியே .....

எனது இக்கட்டான சமயத்தில் 
நல்ல வழியினையும் ,,,
நான் தவறு செய்யும் சமயத்தில் 
சண்டையிட்டு எனக்கு உண்மையை 
புரியவைத்த 
என் அன்பு தோழியே ...
என் வாழ்க்கையின் 
அசந்தர்பமான சுழ்நிலையில் உற்ற துணையாய் இருந்த 
அன்பு தேவதையே..!!!!

இத்துணை பேர் இருந்தும் 
என் வாழ்க்கையே உன் நினைவில் தான் 
இயங்கி கொண்டிருகிறது ....
என்று தெரியுமாடி....!!!!!!!!!!
என் அழகு தோழியே...

என் வாழ்கை பயணத்திலே ,
என்றும் பிரியாத பயணமாக 
நம் இருவரின் பயணமும் இருக்க வேண்டுமடி என் அழகு தேவதையே ...!!! 

என் மரண தருவாயிலும் 
உன் முகம் பார்த்தே 
என் உயிர் பிரிய வேண்டுமடி என் கண்ணம்மா ....