Monday, 13 August 2012

நூறு நட்புக்களுடன் இருப்பதை விட 
ஆபத்தானது 
ஒரு நட்புடன் மட்டும் இருப்பது ...

இன்று நான் ..??
மழலை சொற்கேட்டும் 
மழலை சிரிப்பை பார்த்தும் 
சிரிக்க முடியாத மன நிலையில் ...
சராசரிகளிடம் இருந்து விலகி நிற்க முயல்கிறேன் .. 
ஆனாலும் சில சமயம் நானும் சரசரியாகிவிடுகிறேன் 
அழகில் அல்ல ..........
என்னை விட திறமையான பெண்களை கண்டு 
பொறாமையில் சராசரி பெண்ணாகிவிடுகிறேன்.... 
எல்லா கனவுகளும் நிறைவேறுவதில்லை 
அதற்க்கு முயற்சி எடுக்காத பட்சத்தில் ...
நம் சந்தோசத்திற்கு கொள்ளி போடவே நாம் ஒவ்வொருத்தரும் நம் கையில் எடுக்கும் ஆயுதம் 
காதல்
என்னை தவிர்க்கும் ,வெறுக்கும் உள்ளத்தை நானும் வெறுக்கவே நினைக்குறேன் 
ஆனால் தோற்று போகிறேன் 
உன்னிடம் அல்ல ....
உன் மேல் வைத்துள்ள அன்பில் ..!!!!!!!!!!!!!
உன்னையும் மனிதன் என்று நம்பினேன்
என்னை நீ கொல்ல துணிந்த ஒரு நொடிக்கு முன் வரை ,,
நீயும் நானும் நகமும் சதையும் என்பதை போல அல்ல ..
நாம் இரத்தம் ..
வெள்ளை அணுக்கள் இன்றி சிவப்பணுக்கள் கிடையாது
என்னுடன் சண்டயிட்ட பின் பேசாமலேயே இரு 
நீ பேசாமல் இருக்கும் போது நான் உன்னை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன் ,,,
நம் இடைவெளி பொறுக்காமல் நாம் சேரும் அந்த நொடிக்காக காத்திருக்கிறேன் ..
இரவு பொழுதில் மயக்கத்திலும்,
பயத்திலும் இருக்கும் நமக்கு ..
பகல் பொழுது தான் தெளிவான சிந்தனையை கொடுக்கும் ..
 என்னை சிறை பிடிக்கும்
உன் கண்களுக்கு 
"ஆயுள் தண்டனை" 
அளிக்க போகிறேன் ......
ஆம் ,,
என் ஆயுள் முழுவதும் உன் கண்களுக்குள்ளேயே நான் கைதியாய் .....

Tuesday, 31 July 2012

உன் நிலையை எப்பொழுது நீ மறக்க ஆரம்பிக்கின்றாயோ 
அப்பொழுதிலிருந்து நீ காதலிக்க ஆரம்பித்து விட்டாய் ...............
எழுதப்படாத விதி :
காதலின் ஆரம்பத்தில் தேனை போல ருசி இருக்கும் ..
முடிவில் தேனீ கொட்டியதை  போல் இருக்கும் ..
ருசியை அறிந்த நீயே வலியையும் உணர வேண்டும் ...
கோவில் கொடை:
விருந்தினர் வருகை ..ஆச்சர்யம் ..சந்தோசம் ..
ஆற்றாமை ..கோபம் ..ஆர்ப்பாட்டம் ..
ஆன்மிகம் ,,, அமைதி ..
சண்டைகள் .. சகோதர பாசம் ..
கேலி கிண்டல்கள் ..
ஓடைகள் .. 
வில்லு பாட்டு ,, முளைப்பாரி .. பால்குடம் ..
பூச்சட்டி எடுத்தல் ..மது பொங்குதல் .. 
படையல் .. பூஜைகள் ..
அனைத்தும் அடங்கியது மூன்று நாட்களில் 
சிறு துளி கண்ணீருடன் பிரிந்த 
எம் உறவுகள் .....
மீண்டும் அடுத்த கொடையில் அரங்கேற்றுவோம் ..
மறக்க  நினைக்கும் போதெல்லாம் நினைவில் வந்து என்னை வதை செய்யும் உன் நினைவுகளை என்ன செய்வது..??
என் உயிர் பிரியும் போது உன் நினைவும் பிரியும் என்று சொல்கிறதோ ...!!!!
சந்தேகம் :
 பெண்களுக்கும் மட்டுமே உரித்தான குணம் அல்ல ...
ஆண்களுக்கும் உள்ள பொதுவான குணம் ...
என்னை அன்பிற்குள் சிறை வைத்து
மரண வலி தரும்  உறவு வேண்டாம் .
தாமரை இலை மேல் உள்ள நீரினை போன்ற உறவே வேண்டுகிறேன்..
சிறையில் அடைப்பது உன் கைகளானால்
  எனக்கும் சிறை செல்ல ஆசை தான் ...

Saturday, 21 July 2012

உன் நிலையை எப்பொழுது நீ மறக்க ஆரம்பிக்கின்றாயோ 
அப்பொழுதிலிருந்து நீ காதலிக்க ஆரம்பித்து விட்டாய் ...............


காதலின் ஆரம்பத்தில் தேனை போல ருசி இருக்கும் ..
முடிவில் தேனீ கொட்டியதை  போல் இருக்கும் ..
ருசியை அறிந்த நீயே வலியையும் உணர வேண்டும் ...

Friday, 20 July 2012

கண்ணீரையும் உன்னையும் நட்புற செய்யும்

 காதல் ...
மறைக்கப்பட்ட தமிழச்சி

ஜான்சி ராணி ( கி.பி.1835 -1858 ) காலத்திற்கு முன்னரே
வெள்ளையனை எதிர்த்த முதல்
இந்திய விடுதலை பெண் போராளி வீர மங்கை
வேலு நாச்சியார் (கி.பி.1730 - 1789 ) ஒரு தமிழச்சி.

வடநாட்டில் ஜான்சி ராணி தோன்ற ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். 
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழி தீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிந்துகொளுங்கள்...
வாழ்க தமிழர்களின் புகழ்...
காதலின் ஆரம்ப நிலையில் நீ சுற்றத்தை மறப்பாய்....
ஆழ் நிலையில் உன்னையே நீ மறப்பாய் ..
முற்றிய நிலையில் சுற்றம் உன்னை மறக்கும் ....
காதல் 


சிலருக்கு புரியாத புதிர்.... 
பலருக்கு புரிந்த புதிர் ...
கண் மூடி அனுபவிக்கும் ஒரு ஆனந்த கொண்டாட்டம்  
தூங்கும் போதும் தூங்க விடாமல் செய்யும் தொல்லை ..
மனதின் இறுக்கங்களை  தளர செய்யும் ..
மனதில் இறுக்கங்களை உருவாக்கவும் செய்திடும்..
பலர் கூடி நிற்கும் போது உன்  எண்ணங்களை சிதற செய்திடும் .... 
மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்து உலகை வென்று விட்ட சந்தோசத்தை கொடுக்கும் 
நீ அதில் மூழ்கி விட்டால் உன்னையே மூழ்க செய்திடும் ..
இனிய காலை வணக்கம் 

Friday, 13 July 2012

என்றும் நானாக 


நான் நானாக இருக்கவே ஆசை படுகிறேன்...
நான் ஒன்றும் கல் அல்ல என்னை நீ செதுக்க ..
நீயும் சிற்பி அல்லவே ..
குழந்தையும் அல்ல செய்வது புரியாமல் இருக்க..
முதலில் உன்னை நீ வழி நடத்து ..
தனியாக முடிவு எடுக்கும் திறன் என்னுள் இருக்கிறது..
எனக்கு நீ ஆலோசனை மட்டுமே கூறலாம் 
ஆனால் முடிவு என்னுடையது...
என்னையே நான் செதுக்கும் பணியில் இருக்க 
நீ ஏன் இடையூறாக வருகிறாய் ...
எதற்காகவும்., யாருக்காவும் .,
என் நிலை என்னில் இருந்து மாறாது...
என்னை மாற்றும் முயற்சில் இருந்து நீ மாறிக்கொள் ....

Monday, 2 July 2012

நீ 
வருவாய் என்ற மிதப்பில் இருக்கும்
என் மனதிற்கு எப்படி  புரிய வைப்பது,,
நீ வர மாட்டாய் என்பது தெரிந்தால் 
என்னவாகுமோ ..!!

உன் வீர முகத்தை காண விரும்பிய 
என் கண்களுக்கு நீ தரும் பதில் இது தானா..!!!

தினம் உன் நினைவில்..
உன்னை பார்க்க ..
காத்திருந்த நாட்களை எண்ணிகொண்டிருந்த
விரல்களுக்கு புரியுமோ...!!

தலையணையை அணைக்கும் போதெல்லாம்
விரைவில் உன்னை அணைப்பேன் என்று 
ஏங்கிய உடலுக்கு புரியுமோ ..!!!

உன் மார்பில் தவழ்ந்து 
உன் விரல் பிடித்து 
பேச எண்ணிய சொல்களுக்கு
 எப்படி புரிய வைப்பேன் ..???

உன் மடி சாய்ந்து தூங்க 
எண்ணிய முகம் 
இதை ஏற்று கொள்ளுமோ ..??

உன் தலை முடி கோதி
தூங்க வைக்க எண்ணிய  விரல்கள் எப்படி ஏற்று கொள்ளும் ...

உன் இதழால் சுவைக்க பட வேண்டிய 
 என் இதழ் இதை புரிந்துகொள்ளுமோ...!!


இந்த கணம் முதல் மரணம் ஏற்பட்டது போல் உள்ளது ....

மீண்டும் இந்த இன்ப வேதனையோடு  காத்திருக்கிறேன்
விரைவில் காண்போம் எனும் நம்பிக்கையில் .... 








Friday, 8 June 2012

நீ இன்னும் என்னை
மறக்கவில்லை
அதனால்தான்
நான் இன்னும்
உயிரோடு
இருக்கிறேன் .
கடற்கரையெங்கும்
காதலர் சுவடுகள்
என் பாதத்தை
எங்கே வைப்பது
-

காதல் 
பரம்பரை நோய் அல்ல
தொற்று நோய்..!
-

பூச்செடியின் கீழ் 
நீ - நான்
பூவையும் வண்டையும்
சேர்த்து
இரண்டு காதல் ஜோடிகள்..!

-
காதலுக்கு 
கண்கள் இல்லை
கால்கள் உண்டு
ஓடிவிட
பிரிந்து விட..!
பதில் சொல் காதலனே...!!


என் காதலனே ...!!

உன்னை உன் அம்மாவிற்கு பிறகு 
மனதில் நான் மானசீகமாக சுமந்தேன்...

பிற ஆண்களிடம் பேசாதே பிடிக்கவில்லை என்றாய் 
நிறுத்திவிட்டேன் ....
உன் தோழியிடம் அளவாக இரு என்றாய் 
அளவோடு பழக ஆரம்பித்தேன் அவளுடனும் ...

காதலுக்கு சம்மதம் சொல்லும் முன் 
என்னை பார்க்க தெருவில் தவம் இருப்பாய் 
தாமதமாக வந்தாலும் அசராமல் நிற்பாய்....!!

ஆனால் இன்றோ...?


முன்பெல்லாம் என்னை காதலிக்கிறாயா என்று கேட்டாய்...!!
ஆம் என்று சொல்லும் போது சந்தோசப்பட்டாய்..
இப்பொலுதெல்லாம் என்னை மட்டுமா காதலிக்குறாய்?
என்று கேட்டு ...
என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறாய்...


என்ன சொல்வதாடா என் காதலா ,.... 

என்னை டி சொல்லி அலைக்காமல்
மா என்றே அழைத்தாய்...

ஏன் என்று கேட்டதற்கு 
என் அம்மா, அப்பா , உலகமே நீ தான் என்று சொன்னாய்..

இப்பொழுது

என்னை மனிஷியாய் கூட மதிப்பது இல்லை...


என்னை அணைத்த கரம் 
இன்று 
என்னை அடிக்கின்றது .....

அதீத அன்பு என்று நினைத்தேன் .... 
ஆனால் 
கடைசியில் நீயோ 
உனக்கு என் மீது காதல் இல்லை ,
என்னை விட்டு போய்விடு என்கிறாய்....

ஐந்து வருட காதல்

ஐந்து நிமிடத்தில் தூக்கி எரிய வைத்து விட்டாயடா நீ.... 

நீயா இவ்வாறு என்று நினைக்க தோன்றுகிறது...

எங்கே போனதடா உன் காதல் ...
தனிப்பாடல்:

நகைக்கும் உளம் கருவுற உற்றபின்
வலிவந்து துடிக்க பீறிடும் அழுகை
இளிவரல் பேசும் மனம் மரண 
அச்சத்தில் மருட்கையோடு தாதியை 
வெகுளித் தாமதம் தவிர்க்க,-பிறந்தது
"பிள்ளைக்"கேட்க பெருமிதம் சொல்ல
உவகை கொள்ளும் உறவில் அமைதி.

இப்பாடலில் பின்வரும் உணர்சிகள் தான் கூறப்பட்டுள்ளது 

நகை, 
அழுகை, 
இளிவரல், 
மருட்கை, 
அச்சம், 
வெகுளி, 
பெருமிதம், 
உவகை, 
அமைதி
 பாரத தாய்க்கு ஒரு மன்னிப்பு கடிதம்

பாரத தாயின் மக்களாய் இருந்து கொண்டு , 
குலம் காக்க தவறியதற்காக 
எங்களை மன்னியும்....

என் இனம் அழியும் போது
வெளி நின்று வேடிக்கை பார்த்த 
என்னை மன்னியும்...

எம் இனம் 
அழிவதை வைத்து அரசியல் செய்தவர்களை 
மன்னியும்....

அதை தடுக்க முடியாமல் 
நிர்க்கதி அற்று நின்ற 
என் சகோதர , சகோதரிகளையும்,என் முந்தைய சமுதாயத்தினரையும் என்னையும் மன்னியும்....

எம் இனம் அழியும் போது
கிரிக்கெட்டில் மூழ்கி 
தன்னை மறந்து, நாட்டையும் மறந்தவர்களை மன்னியும்....

என் போன்ற பெண்களின் 
மானம் காக்க தவறிய 
என்னையயும், என் உடன் பிறவா சகோதரிகளையும் மன்னியும்...

எம் இனத்தை காக்க இயலாத 
அருகதை அற்ற
இந்த உயிர்ரற்ற , உணர்ச்சி இல்லாத ஜடத்தை மன்னியும் ...

இனியும் உன்னிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் அம்மா... !!!

இனியாவது உணர்ச்சிஉள்ளவளாக 
இளைஞர் புரட்சி செய்து 
எம் இனத்தை காப்பேன் ....

காக்க இயலாவிடில் நானும் 
எம்மக்களுடன் சாவேனே தவிர ,,
எம் இனத்தை அழித்த இந்த மிருகங்களுடன் 
இவ்வுலகில் உயிர் வாழ மாட்டேன்....

இனியாவது எழுவோம் தமிழர்களே..!!
நாம் செய்வோம் புரட்சி.... 
மீதம் இருக்கும் நம் மக்களை காக்க வீறு கொண்டு எழு தமிழா...
எடுக்கிறேன் இச்சபதத்தை ,,
என் சகோதர, சகோதரிகள், நண்பர்களுடன்....

குலம் காக்க கை கொடுங்கள் நண்பர்களே... 
பூக்கள்

பூவே...

உன்னிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் ,
எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதை.

அன்பின் வடிவமாக..
அழகின் உருவாக...
காதலர்களின் சின்னமாக ..
ஆன்மீகத்தில் முக்கிய பங்காக..

உனக்கு தான் எத்தனை முகங்கள்
அனைத்திலும் இன்முகத்தை மட்டுமே காட்ட கூடிய சிறப்பு 
உன்னிடம் மட்டுமே உள்ளது..

கல்யாண வீட்டிலும், துக்க வீட்டிலும் 
நீ ஒரு முக்கிய தேவை ...

கோபமான மனிதன் கூட 
உன் அழகான இதழ்களை பார்த்தால் சாந்தம் ஆகி விடுவான் ..

உலகில் நீயும் ஒரு தனி சிறப்புடைய 
உயிராக இருப்பதில்,, 
அனைவருக்குமே உன் மீது தனி காதல் உண்டு... 

இறந்த பின்னும் ஒரு மனிதருக்கு 
அஞ்சலி செலுத்தும் போது,
நீயே அதற்கு முதல் தேர்வாய் இருக்கிறாய் ...

உன்னை போல் 
அன்புடனும்,
அமைதியுடனும் 
எதிர்பார்ப்பு இல்லாமலும் ,
வாழ நானும் ஆசைப்படுகிறேன் ...

   

மருத்துவ குறிப்புக்கள் : 

கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

பல்
வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி
இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

குழந்தைகளுக்கு
ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல்
‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும். 


ஜலதோஷ‌ம், அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்க‌ள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுக‌ள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோ‌ய்க‌ள் வந்து மனிதர்களை பாடா‌ய்படுத்தி வருவது குறித்து நான் எழுதியது ஏற்கனவே இந்த இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் எனக்கு வந்த நோ‌ய் மற்றும் குறைபாடுகளுக்கு நான் செ‌ய்து கொண்ட வைத்தியம் பற்றி அனுபவப்பூர்வமாக எழுதியிருந்தேன். அந்த வரிசையில இன்னும் நிறைய அனுபவ வைத்தியம் இருக்கு, அதை சொல்றேன், பாருங்க... பலனை நீங்களும் அனுபவியுங்க!

வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டரை ‘மடக் மடக்’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செ‌ய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும், கொஞ்சநேரத்துல தலைவலி, தொண்டை கரகரப்பு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர், மோர் சாப்பிடுறதுனாலயும், ஜூஸ் குடிக்கிறதுனாலயும், மழையில நனையிறதுனாலயும், பூசணிக்கா‌ய் சாப்பிடுறதுனாலயும்கூட சிலபேருக்கு ஜலதோஷம் வரலாம்.

புத்தக பாதுகாப்பு முறைகள்:


புத்தகங்களை அதிக வெப்பம், ஈரப்பதம், தூசி இல்லாத அறையில் அல்லது அலமாரியில் பாதுகாக்கவும்

ஈரப்பதம் மற்றும் செல்லரித்ததால் பாதிக்கப்பட்ட புத்தகங்களை பிற புத்தகங்களுக்கு அருகில் வைத்திட வேண்டாம், முடிந்தால் தனியே பாதுகாக்கவும்

புத்தகங்களை அட்டாளையில் அல்லது வீட்டின் கிடங்கில் (Store room) ஒருபோதும் வைத்திட வேண்டாம். அதிகபட்ச ஈரப்பதமும், பூச்சிகளும் உங்கள் புத்தகங்களை பதம் பார்த்திடும்!

புத்தகங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்ககூடாது, மாறாக அவைகளை நிற்பாட்டிய நிலையில் வைக்கவும்

புத்தகங்களை அடுக்கும் முறை:

ஒவ்வொரு புத்தகத்தையும் அதன் அளவை விட சற்றே பெரிதானதொரு "Mylar" பிளாஸ்டிக் உறையில் வைத்திட வேண்டும். புத்தகத்தை நுழைப்பதற்கு முதல் அதற்கு சாய்மானமாக, Mailaar உறை அளவிலான ஒரு அட்டையை வைத்திடவும் (கடின அட்டை கிடைக்கவில்லையெனில், இரண்டடுக்கு கார்ட்போர்ட் அட்டையை உபயோகித்திடலாம்). சாதாரண PVC பிளாஸ்டிக் உறையை பயன்படுத்துவது நல்லதல்ல!

இவ்வாறு பலப்படுத்தப்பட்ட புத்தகத்தை ஒன்றன் மீது ஒன்றாக சாய்வாக நிற்பாட்டி வைக்கலாம்!

முடிந்த வரை ஒரே அளவிலான புத்தகங்களாக பிரித்து அடுக்கவும்

பத்து அல்லது பதினைந்துக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக இவ்வாறு அடுக்கிட வேண்டாம்

மூடியுடன் கூடிய அட்டைப்பெட்டிகளில் மேற்கண்டவாறு சிறிது சிறிதாய் புத்தகங்களை பிரித்து வைக்கலாம். இவ்வாறு அட்டை பெட்டிகளில் மூடி வைப்பது பூச்சிகளையும், ஈரப்பததையும் கட்டுப்படுத்தும்

சில மாதங்களுக்கு ஒரு முறை பெட்டிகளை திறந்து புத்தகங்களை கண்காணியுங்கள்!

செய்தித்தாள் அல்லது மட்ட ரக தாள்கள் மூலம் புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டாம், இது புத்தக அட்டையை பழுப்பேற செய்யும்!

கிழித்த புத்தகங்களை பின் அடிப்பது, கிளிப் செய்வது, ரப்பர்பேண்ட் மூலம் கட்டுவது போன்ற முறைகளை தவிர்க்கவும் - இவைகள் துருப்பிடித்தோ அல்லது ரப்பர் ஒட்டியோ புத்தக அட்டை மற்றும் உள்பக்கங்களை பாழ் செய்திடும்

கிழிந்த பக்கங்களை சாதாரண பிளாஸ்டிக் பசைநாடா (Cellotape!) மூலம் ஒட்டக்கூடாது! முடிந்தால் உயர்தர நிறம், வழுவழுப்பில்லாத, மின்னாத நாடாக்களை பயன்படுத்தவும்! (உ.ம். Scotch Magic Tape)

மடங்கிய பக்கங்களை சீராக்குவதாய் நினைத்து புத்தகத்தின் மேல் அதிக எடை உடைய பொருட்களை பல மணி நேரம் வைப்பது தவறு

சுருண்ட பக்கங்களை நேராக்க இஸ்திரி பெட்டியை கட்டாயமாக உபயோகிக்க கூடாது! இது தாளை பழுப்பேற்றி விரைவில் பொடித்துப்போக செய்யும்!

அளவுக்கதிகமாக அந்துருண்டைகளை உபயோகிக்க வேண்டாம், புத்தகத்தில் உள்ள மீன் போன்ற புழுக்களை இது ஏதும் செய்வதில்லை (நான் அறிந்த வரையில்)! மாறாக நாப்தலின் உருண்டைகளின் அதீத வேதித்தன்மை தீங்கையே விளைவிக்கும்!

கரப்பான் பூச்சிகளும் மிக ஆபத்தானவை, அவற்றை கட்டுக்குள் வைத்திடுங்கள்! அதற்காக கொல்லி மருந்து தெளிப்பான்களை பயன்படுத்தி புத்தகங்களை குளிப்பாட்டிட வேண்டாம்!

உணவுப்பொருட்களை புத்தகங்களுக்கு அருகில் வைக்கவேண்டாம்

புத்தகங்களை கணக்கெடுப்பதாக நினைத்துக்கொண்டு அதன் மேல் வெளியீடு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத வேண்டாம்!
மாறாக ஒரு சிறிய காகிததில் தேவையான விவரங்களை எழுதி புத்தக மேற்பரப்பில் தெரியுமாறு வைத்துக்கொள்ளுங்கள்!

சில புத்தகங்களில் முன் மற்றும் பின்னட்டை மேல் ஒட்டி இருக்கும் பிளாஸ்டிக் மேலுறையை தனியே பிரிக்க வேண்டாம் (உ.ம். ஆரம்ப கால ராணி காமிக்ஸ்). அவ்வாறு பிரிக்கும் போது அந்த அட்டை பளபளவென்று புதிது போல மின்னி உங்களை மகிழ செய்யலாம், ஆனால் விரைவிலேயே தூசு மற்றும் அழுக்கு ஒட்டி அதிகமாக சேதமடைந்து விடும்!

படிக்கும் / கையாளும் முறை:

பழைய புத்தகங்களை படிக்க நினைத்தால் அதை இன்னொரு புத்தகத்தின் உள்ளே வைத்து, சமதளத்தில் கிடத்தி அதிகம் கை படாமல் படிக்கவும்

பக்கங்களை எச்சில் அல்லது பசை தொட்டு திருப்பக்கூடாது!

புத்தகங்களை (பக்கங்களை) மடிக்கவோ, வளைக்கவோ கூடாது!

புத்தகங்களின் அருமை அறியாதவர்களிடம், குறைந்த பட்சம் பார்க்க கூட கொடுக்க வேண்டாம்! அவர்களுக்கு நிச்சயமாக புத்தகத்தை எப்படி கையாளுவது என்று தெரிந்திருக்காது!

முடிந்த வரை உள்பக்கங்களை ஸ்கேன் செய்வதை தவிருங்கள்!

தெரிந்துகொள்வோம் உலகை ஆண்ட தமிழன் வரலாறு!




தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே
குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.
1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்
இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”. கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.
வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்! இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.