Friday, 8 June 2012

 பாரத தாய்க்கு ஒரு மன்னிப்பு கடிதம்

பாரத தாயின் மக்களாய் இருந்து கொண்டு , 
குலம் காக்க தவறியதற்காக 
எங்களை மன்னியும்....

என் இனம் அழியும் போது
வெளி நின்று வேடிக்கை பார்த்த 
என்னை மன்னியும்...

எம் இனம் 
அழிவதை வைத்து அரசியல் செய்தவர்களை 
மன்னியும்....

அதை தடுக்க முடியாமல் 
நிர்க்கதி அற்று நின்ற 
என் சகோதர , சகோதரிகளையும்,என் முந்தைய சமுதாயத்தினரையும் என்னையும் மன்னியும்....

எம் இனம் அழியும் போது
கிரிக்கெட்டில் மூழ்கி 
தன்னை மறந்து, நாட்டையும் மறந்தவர்களை மன்னியும்....

என் போன்ற பெண்களின் 
மானம் காக்க தவறிய 
என்னையயும், என் உடன் பிறவா சகோதரிகளையும் மன்னியும்...

எம் இனத்தை காக்க இயலாத 
அருகதை அற்ற
இந்த உயிர்ரற்ற , உணர்ச்சி இல்லாத ஜடத்தை மன்னியும் ...

இனியும் உன்னிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் அம்மா... !!!

இனியாவது உணர்ச்சிஉள்ளவளாக 
இளைஞர் புரட்சி செய்து 
எம் இனத்தை காப்பேன் ....

காக்க இயலாவிடில் நானும் 
எம்மக்களுடன் சாவேனே தவிர ,,
எம் இனத்தை அழித்த இந்த மிருகங்களுடன் 
இவ்வுலகில் உயிர் வாழ மாட்டேன்....

இனியாவது எழுவோம் தமிழர்களே..!!
நாம் செய்வோம் புரட்சி.... 
மீதம் இருக்கும் நம் மக்களை காக்க வீறு கொண்டு எழு தமிழா...
எடுக்கிறேன் இச்சபதத்தை ,,
என் சகோதர, சகோதரிகள், நண்பர்களுடன்....

குலம் காக்க கை கொடுங்கள் நண்பர்களே... 

No comments:

Post a Comment