Friday, 8 June 2012

பூக்கள்

பூவே...

உன்னிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும் ,
எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதை.

அன்பின் வடிவமாக..
அழகின் உருவாக...
காதலர்களின் சின்னமாக ..
ஆன்மீகத்தில் முக்கிய பங்காக..

உனக்கு தான் எத்தனை முகங்கள்
அனைத்திலும் இன்முகத்தை மட்டுமே காட்ட கூடிய சிறப்பு 
உன்னிடம் மட்டுமே உள்ளது..

கல்யாண வீட்டிலும், துக்க வீட்டிலும் 
நீ ஒரு முக்கிய தேவை ...

கோபமான மனிதன் கூட 
உன் அழகான இதழ்களை பார்த்தால் சாந்தம் ஆகி விடுவான் ..

உலகில் நீயும் ஒரு தனி சிறப்புடைய 
உயிராக இருப்பதில்,, 
அனைவருக்குமே உன் மீது தனி காதல் உண்டு... 

இறந்த பின்னும் ஒரு மனிதருக்கு 
அஞ்சலி செலுத்தும் போது,
நீயே அதற்கு முதல் தேர்வாய் இருக்கிறாய் ...

உன்னை போல் 
அன்புடனும்,
அமைதியுடனும் 
எதிர்பார்ப்பு இல்லாமலும் ,
வாழ நானும் ஆசைப்படுகிறேன் ...

   

No comments:

Post a Comment