நீ
வருவாய் என்ற மிதப்பில் இருக்கும்
என் மனதிற்கு எப்படி புரிய வைப்பது,,
நீ வர மாட்டாய் என்பது தெரிந்தால்
என்னவாகுமோ ..!!
உன் வீர முகத்தை காண விரும்பிய
என் கண்களுக்கு நீ தரும் பதில் இது தானா..!!!
தினம் உன் நினைவில்..
உன்னை பார்க்க ..
காத்திருந்த நாட்களை எண்ணிகொண்டிருந்த
விரல்களுக்கு புரியுமோ...!!
தலையணையை அணைக்கும் போதெல்லாம்
விரைவில் உன்னை அணைப்பேன் என்று
ஏங்கிய உடலுக்கு புரியுமோ ..!!!
உன் மார்பில் தவழ்ந்து
உன் விரல் பிடித்து
பேச எண்ணிய சொல்களுக்கு
எப்படி புரிய வைப்பேன் ..???
உன் மடி சாய்ந்து தூங்க
எண்ணிய முகம்
இதை ஏற்று கொள்ளுமோ ..??
உன் தலை முடி கோதி
தூங்க வைக்க எண்ணிய விரல்கள் எப்படி ஏற்று கொள்ளும் ...
உன் இதழால் சுவைக்க பட வேண்டிய
என் இதழ் இதை புரிந்துகொள்ளுமோ...!!
இந்த கணம் முதல் மரணம் ஏற்பட்டது போல் உள்ளது ....
மீண்டும் இந்த இன்ப வேதனையோடு காத்திருக்கிறேன்
விரைவில் காண்போம் எனும் நம்பிக்கையில் ....
No comments:
Post a Comment