Saturday, 21 July 2012

உன் நிலையை எப்பொழுது நீ மறக்க ஆரம்பிக்கின்றாயோ 
அப்பொழுதிலிருந்து நீ காதலிக்க ஆரம்பித்து விட்டாய் ...............


காதலின் ஆரம்பத்தில் தேனை போல ருசி இருக்கும் ..
முடிவில் தேனீ கொட்டியதை  போல் இருக்கும் ..
ருசியை அறிந்த நீயே வலியையும் உணர வேண்டும் ...

Friday, 20 July 2012

கண்ணீரையும் உன்னையும் நட்புற செய்யும்

 காதல் ...
மறைக்கப்பட்ட தமிழச்சி

ஜான்சி ராணி ( கி.பி.1835 -1858 ) காலத்திற்கு முன்னரே
வெள்ளையனை எதிர்த்த முதல்
இந்திய விடுதலை பெண் போராளி வீர மங்கை
வேலு நாச்சியார் (கி.பி.1730 - 1789 ) ஒரு தமிழச்சி.

வடநாட்டில் ஜான்சி ராணி தோன்ற ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். 
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழி தீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசி.

வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.

இதை உங்கள் நண்பர்களுக்கும் பகிந்துகொளுங்கள்...
வாழ்க தமிழர்களின் புகழ்...
காதலின் ஆரம்ப நிலையில் நீ சுற்றத்தை மறப்பாய்....
ஆழ் நிலையில் உன்னையே நீ மறப்பாய் ..
முற்றிய நிலையில் சுற்றம் உன்னை மறக்கும் ....
காதல் 


சிலருக்கு புரியாத புதிர்.... 
பலருக்கு புரிந்த புதிர் ...
கண் மூடி அனுபவிக்கும் ஒரு ஆனந்த கொண்டாட்டம்  
தூங்கும் போதும் தூங்க விடாமல் செய்யும் தொல்லை ..
மனதின் இறுக்கங்களை  தளர செய்யும் ..
மனதில் இறுக்கங்களை உருவாக்கவும் செய்திடும்..
பலர் கூடி நிற்கும் போது உன்  எண்ணங்களை சிதற செய்திடும் .... 
மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்து உலகை வென்று விட்ட சந்தோசத்தை கொடுக்கும் 
நீ அதில் மூழ்கி விட்டால் உன்னையே மூழ்க செய்திடும் ..
இனிய காலை வணக்கம் 

Friday, 13 July 2012

என்றும் நானாக 


நான் நானாக இருக்கவே ஆசை படுகிறேன்...
நான் ஒன்றும் கல் அல்ல என்னை நீ செதுக்க ..
நீயும் சிற்பி அல்லவே ..
குழந்தையும் அல்ல செய்வது புரியாமல் இருக்க..
முதலில் உன்னை நீ வழி நடத்து ..
தனியாக முடிவு எடுக்கும் திறன் என்னுள் இருக்கிறது..
எனக்கு நீ ஆலோசனை மட்டுமே கூறலாம் 
ஆனால் முடிவு என்னுடையது...
என்னையே நான் செதுக்கும் பணியில் இருக்க 
நீ ஏன் இடையூறாக வருகிறாய் ...
எதற்காகவும்., யாருக்காவும் .,
என் நிலை என்னில் இருந்து மாறாது...
என்னை மாற்றும் முயற்சில் இருந்து நீ மாறிக்கொள் ....

Monday, 2 July 2012

நீ 
வருவாய் என்ற மிதப்பில் இருக்கும்
என் மனதிற்கு எப்படி  புரிய வைப்பது,,
நீ வர மாட்டாய் என்பது தெரிந்தால் 
என்னவாகுமோ ..!!

உன் வீர முகத்தை காண விரும்பிய 
என் கண்களுக்கு நீ தரும் பதில் இது தானா..!!!

தினம் உன் நினைவில்..
உன்னை பார்க்க ..
காத்திருந்த நாட்களை எண்ணிகொண்டிருந்த
விரல்களுக்கு புரியுமோ...!!

தலையணையை அணைக்கும் போதெல்லாம்
விரைவில் உன்னை அணைப்பேன் என்று 
ஏங்கிய உடலுக்கு புரியுமோ ..!!!

உன் மார்பில் தவழ்ந்து 
உன் விரல் பிடித்து 
பேச எண்ணிய சொல்களுக்கு
 எப்படி புரிய வைப்பேன் ..???

உன் மடி சாய்ந்து தூங்க 
எண்ணிய முகம் 
இதை ஏற்று கொள்ளுமோ ..??

உன் தலை முடி கோதி
தூங்க வைக்க எண்ணிய  விரல்கள் எப்படி ஏற்று கொள்ளும் ...

உன் இதழால் சுவைக்க பட வேண்டிய 
 என் இதழ் இதை புரிந்துகொள்ளுமோ...!!


இந்த கணம் முதல் மரணம் ஏற்பட்டது போல் உள்ளது ....

மீண்டும் இந்த இன்ப வேதனையோடு  காத்திருக்கிறேன்
விரைவில் காண்போம் எனும் நம்பிக்கையில் ....